வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (12:37 IST)

வருந்துவதை விட திருந்துவது நல்லது - ஹெச்.ராஜாவிற்கு குட்டு வைத்த அதிமுக நாளிதழ்

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக ஹெச். ராஜா தெரிவித்த கருத்திற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ கண்டனம் தெரிவித்துள்ளது.

 
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்.  இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். 
 
அதேபோல், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். இந்த விவகாரம் தமிழகமெங்கும் பெரும் அதிவலைகளை உண்டாக்கியது. தமிழகமெங்கும் ஹெச்,ராஜாவிற்கு எதிராக ஆர்ப்பட்டாங்கள் வெடித்தன. அவரின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டது.
 
இந்த விவகாரம் தமிழகமெங்கும் பெரும் அதிவலைகளை உண்டாக்கியது. ஸ்டாலின், வைகோ, சீமான், வீரமணி, தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ஹெச்.ராஜாவிற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர். ஆனால், அதிமுக தரப்பில் இருந்து ஹெச்.ராஜாவிற்கு எதிராக வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்படவில்லை.
 
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நமது அம்மா நாளிதழில் ஹெச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து, இன்று கட்டுரை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், இப்படி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து விட்டு, அதன் பின் வருந்துகிறேன் என ஒரு வார்தையில் கூறி தப்பிக்கக் கூடாது. அதனால் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை, பொருள் இழப்பு இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? இப்படி அட்மின் பெயரை சொல்லி கம்பி நீட்டும் ஹெச்.ராஜா வருந்துவதை விட திருந்துவது நல்லது” என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.