1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 ஜனவரி 2022 (09:23 IST)

தொடர்ந்து 32 மணி நேர முழு ஊரடங்கு - தமிழகத்தின் நிலை என்ன?

நேற்று இரவு 10 மணிக்கு துவங்கிய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

 
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து போலீசார் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
நேற்று இரவு 10 மணிக்கு துவங்கிய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை அமல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் சமயத்தில் சிலவற்றிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அவற்றின் விவரம் பின்வருமாறு... 
 
அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கும்
 
உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்
 
உணவு விநியோகிக்கும் மின் வணிக நிறுவனங்கள் அந்த நேரத்தில் மட்டுமே செல்பட அனுமதிக்கப்படும்
 
பேருந்து, ரயில், விமானப் பயணம் மேற்கொள்வோர் சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம்
 
சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கம். மொத்தம் 343 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. 
 
ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
உணவு விநியோகம் தவிர பிற மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை
 
கோயம்பேடு சந்தை செயல்படாது