வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (15:22 IST)

ஜெ. மரணம்: விசாரணை வளையத்தில் ரிச்சார்ட் பீலே!

ஜெ. மரணம்: விசாரணை வளையத்தில் ரிச்சார்ட் பீலே!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவை விசாரிக்கும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது.
 
இந்த விசாரணை கமிஷனில் யார் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள். எந்த எந்த அமைச்சர்களெல்லாம் விசாரணை கமிஷனின் வளையத்துக்குள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடமும், அமைச்சர் ஜெயகுமாரிடமும் கேட்டனர்.
 
அதற்கு பதில் அளித்த இரண்டு அமைச்சர்களும், ஜெயலலிதாவின் மரணத்தின் போது அந்த சூழலுக்கு தொடர்புடைய அனைவரும் விசாரணைக்கமிஷனின் மூலமாக விசாரிக்கப்படுவார்கள். மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்கும் உரிமை இந்த விசாரணைக்கமிஷனுக்கு உண்டு என கூறியுள்ளனர்.