1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (08:42 IST)

சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் - தமிழகத்தில் இதுவே முதல்முறை!!

73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 

 
இன்று நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கடந்த 1950 ஆம் ஆண்டு குடியரசு நாடாக மாறிய நிலையில் இன்று 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிந்து உள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 
 
இந்நிலையில் 73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல் முறையாகும்.