வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஜனவரி 2022 (15:25 IST)

குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து இல்லை: ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மாலையில் ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட பின்னர் அன்று மாலையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர்களுக்கு ஆளுனர்  தனது மாளிகையில் தேநீர் விருந்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குடியரசு தினத்தன்று மாலையில் நடைபெறும் ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.