திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (16:50 IST)

அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி: ஜூன் 3ல் வழங்கப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு!

அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி: ஜூன் 3ல் வழங்கப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு!
அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதனால் கோவில் பணியாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அறநிலைத்துறை குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கோவில் பணியில் ஈடுபட்டுள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு நிவாரணம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது
 
ரூபாய் 4000 உதவி தொகை மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருள்கள் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று இந்த நிவாரண உதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் தங்களுடைய நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.