1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (14:18 IST)

கொரோனாவால் இறந்த உடல்களை உறவினர்களே தேடி எடுத்து செல்லும் அவலம்!

கொரோனாவால் இறந்த உடல்களை உறவினர்களே தேடி எடுத்து செல்லும் அவலம்!
தேனியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் குவியல் குவியலாக இருப்பதை அடுத்து உறவினர்களை தேடி எடுத்து உடல்களை எடுத்துச் செல்லும் அவலம் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தேனியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை பிணக் கிடங்க்9ல் குவியலாக வைத்திருப்பதாகவும் தங்களுடைய உறவினர் உடலை கேட்டு வருபவர்களிடம் பிண அறையை திறந்து கொடுத்து நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து உறவினர்களே பிணக்கிடங்கிற்கு சென்று பிணத்தை தேடி எடுத்து அதன் பின் இறுதி சடங்கு செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இது குறித்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.