மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதி! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல், சினிமா பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனாவுக்கு பிறகான பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.