செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (14:40 IST)

இது என்னடா புதுசா இருக்கு! எம்.எல்.ஏ பெயரில் ரேஷன் கடை

ஒரு தொகுதியில் ரேஷன் கடையை எம்.எல்.ஏ திறந்து வைப்பதை நாம் பார்த்திருப்போம். அல்லது தன்னுடைய தொகுதிக்கு ரேஷன் பொருட்கள் சரியாக வழங்குவதில்லை என அந்த தொகுதி எம்.எல்.ஏ புகார் கூறுவதை கேள்வி பட்டிருப்போம். 

 
ஆனால், ஒரு எம்.எல்.ஏ.வின் பெயரிலேயே ரேஷன் கடை அமைந்திருப்பது இதுவரை யாரும் பார்க்காத ஒன்று. ஆனால், அப்படி ஒரு ரேஷன் கடை நாகர்கோவிலில் அமைந்துள்ளது.
 
நாகர்கோவில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நியாயவிலைக்கடை என பெயர் பலகையே வைக்கப்பட்டுள்ளது.  நிதி ஒதுக்கீடு என பதிவிட்டு அவரின் பெயர் பெரிதாக பதிவிட்டிருப்பதால் நாமும் அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. 

இவர் திமுக எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.
 
இந்தப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.