1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (12:45 IST)

திருடிய பணத்தை வைத்து ஹைடெக் பங்களா கட்டிய திருட்டுத் தம்பதி

நெல்லையில் திருடிய பணத்தை வைத்து சொகுசு பங்களா கட்டிய தம்பதியினரை போலீஸார் கைது செய்துயுள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் கார்த்திக்குமார்(33). இவனது மனைவி பிரியங்கா. கார்த்திக்குமார் பகல் வேலைகளில் சுரண்டை, சேர்ந்தமரம், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர், குற்றாலம் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் மனைவியுடன் அங்கு சென்று மறைவான இடத்தில் மனைவியை இறக்கி விட்டு, பூட்டியிருக்கும் வீடு புகுந்து கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்து நகைகளை மனைவியிடம் பொடுப்பான்.
 
ஏனென்றால் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பர். ஆகவே அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜோடியாக சென்றால் போலீஸாருக்கு சந்தேகம் வராது என பிளான் பண்ணி கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இதேபோல் இவர்கள் இதுவரை 200 பவுனுக்கு மேல் நகையையும், பல லட்சம் ரூபாயையும் திருடியுள்ளனர். திருடிய பணத்தை வைத்து கார்த்திக்குமார் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் திருடிய பணத்தை வைத்து சொந்த ஊரில் பிரம்மாண்டமான பங்களாவை கட்டியுள்ளார் கார்த்திக்குமார்.

இந்நிலையில் புகாரின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக கொள்ளையர்களை தேடி வந்த போலீஸார் கொள்ளையன் கார்த்திக்குமாரையும் அவனது மனைவி பிரியங்காவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.