1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:32 IST)

தமிழகத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள்: அரசு தகவல்

Ration Card
தமிழகத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இனியும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் தனியாக அல்லது குடும்பத்தோடு வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு இதுவரை 86,986  குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே குடும்ப அட்டைகள் வேண்டும் என விண்ணப்பம் செய்தவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
பாலியல் தொழிலாளர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குடும்ப அட்டைகள் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்