திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:04 IST)

தமிழ்சினிமா துறையினருக்கு புகழாரம் சூட்டிய ''கே.ஜி .எஃப் ''ஹீரோ!

கே.ஜி.எ ஃப் -2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில், தமிழ் சினிமாத்துறையினர் பற்றி  நடிகர் யாஷ் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பௌ கூட்டியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.

பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரன்னிங் நேரத்தைப் பொறுத்தவரை 2 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 06 விநாடிகளை இந்தப்படம் கொண்டுள்ளது. ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’ படம், 2 மணி நேரம் 35 நிமிடங்களைக் கொண்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் சுமார் 13 நிமிடங்கள் கூடுதலாக உள்ளது.

 இந்நிலையில், கே.ஜி.எஃப்-2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில்  நடிகர் யாஷ் பேசியதாவது: கே.ஜி.எஃப்-1 படத்தை  மூன்றாண்டுகளுக்கு முன் என் நண்பர் விஷாலின் மூலம் வெளியிட்டோம். அதற்கு ஆதரவளித்ததற்கு          நன்றி தெரிக்கிறேன்.

தமிழகத்திலுள்ள சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும்  கடும் உழைப்பாளிகளாகவும், சண்டைபயிற்சி  செய்பவர்களாக உள்ளனர். இதற்கு சண்டைப்பயிற்சி இயகுநர் அன்பறிவு  நல்ல உதாரணம்.     இப்பகத்தின் முதல் பாகத்தின் பணியாற்றியதற்கு அன்பறிவுக்கு தேசிய விருது கிடைத்தது.     

இப்படத்தின்  வசன கர்த்தா, பாடலாசிரியர் மதுரக்கவி, ஒளிப்பதிவாளர் புவன்  ,  உள்ளிட்ட பலரும்     உண்மையாக உழைத்துள்ளனர். இப்படத்திற்குப் பலம் இயக்குநர் பிரஷாந்த் தான். இப்படத்தில்    நான் தமிழ் டப்பிங் பேச முயற்சித்தேன். ஆனால் பேசவில்லை; அடுத்த படங்களில் பேச முயற்சிக்க்கிறேன்…மேலும், இப்படத்ததிற்கு எல்லோரது ஆதரவும் வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.