செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மே 2021 (09:21 IST)

கொரோனா குறையட்டும் அவசரப்படாம இருங்க! – அரசின் முடிவிற்கு ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் நாளை முதல் இரண்டாம் கட்ட முழு ஊரடங்கு தொடங்கும் நிலையில் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மெல்ல கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் நாளை முதல் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சில நகரங்களில் தொழில்துறை நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ”தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை உட்பட 8 நகரங்களை தவிர்த்து மீத 30 நகரங்களில் தொழில்துறை நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் முடிவு ஊரடங்கின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் பலரின் முயற்சிகளுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு அவசர முடிவுகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்துதலை சீர்குலைக்காமல், ஏற்றுமதி நிறுவனங்கள், பெரிய ஆலைகளை மூட உத்தரவிட வேண்டும் என விரிவான அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.