வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (18:50 IST)

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த்; சத்தியநாராயண ராவ் தகவல்

நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.


 
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை அழைத்து பேசியது முதல் அவர் அரசியலில் களமிறங்க போகிறார் என்ற செய்தி வெளியாகி வருகிறது. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த தனது அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிப்பார் என்றும் இன்றுவரை செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
 
ஆனால் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அறிவிப்பேன் என்று கூறி வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ், ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். ரஜினிகாந்த அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், கூட்டணி இல்லாமல் தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று முன்பே சத்தியநாராயண ராவ் கூறியது குறிப்பிடத்தக்கது.