வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (17:01 IST)

ஆன்மீக அரசியல் என்றால் என்ன தெரியுமா? - ரஜினிகாந்த் விளக்கம்

ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

 
கடந்த 31ம் தேதி தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். மேலும், ஆன்மீக அரசியலை தான் முன்னெடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
 
மேலும், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். உண்மை, உழைப்பு, உயர்வு எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை என அவர் கூறினார்.
 
அந்நிலையில், ஆன்மீக அரசியல் எனில் அது பாஜகவுடன் தொடர்புடையது என பலரும் விமர்சிக்க தொடங்கினர். 
 
இந்நிலையில், இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு அருகே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி “ ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, நாணயமான அரசியல். இதில் எந்த விதமான சாதி, மத சார்பும் இல்லை. இது அறம் சார்ந்த அரசியல். இது ஆத்மாவுடன் தொடர்புடைய அரசியல்” எனக் கூறினார்.
 
மேலும் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பின்னால் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.