Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிருஷ்ணகிரியில் ரஜினி போட்டியா? ரசிகர்கள் விருப்பம்

Rajini
Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (07:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை தெளிவாக அறிவித்தது மட்டுமின்றி அதற்கான பணியிலும் இறங்கிவிட்ட நிலையில் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ரஜினியின் அரசியல் வருகையை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற ஊர், ரஜினியின் மூதாதையர் ஊர் என்பதால் ரஜினிகாந்த், சொந்த ஊரான கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியபோது, 'ரஜினிக்கு 234 தொகுதிகளை வென்று கொடுத்து அவரை முதல்வராக்குவோம். கிருஷ்ணகிரி ரஜினிக்கு ஸ்பெஷல் ஊர் என்பதால் இங்கு அவர் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்று கூறினார். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரஜினி, கிருஷ்ணகிரியில் போட்ட்யிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :