வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (17:46 IST)

ரஜினி கமலுக்கு முதல்வராகும் யோகம் இல்லை - கருப்பண்ணன்

தமிழக அரசியலை யாராலும் கணிக்க முடியாத நிலையில் சென்று கொண்டுள்ளது.ஏகப்பட்ட எதிர்பார்புகள் அன்றாடம் பிரேக்கிங் செய்திகள், அவதானிப்புகள் அற்ற தீடீர் திருப்பங்கள் நிறைந்த முடிவுகள் என எல்லாவற்றுக்குமான  தலைமை மாநிலமாக தமிழ்நாடு உருவாகிக்கொண்டுள்ளது.
திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட எதிர்ப்புக் கட்சிகள்,வலதுசாரிகள் என எண்ணற்ற கட்சிகள் தொடர்ந்து இயங்கிவந்தாலும், திராவிடக் கட்சிகளின் ஆளுமையை யாராலும் அசைக்க முடியவில்லை. இந்நிலையில் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து அமைச்சர், கருப்பண்ணன் தெரிவித்துள்ளதாவது : 

சினிமாவில் நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் எடுப்பதை மட்டும் ரஜினி மேற்கொள்ள வேண்டும் என கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், படம் வெளியாகும் நேரத்தில் அரசியலுக்கு வருவதாக  தெரிவிக்கும்  நடிகர்கள் படம் வந்தபிறகு  காணாமல் போகிறார்கள். 
 
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சீமான் ஆகியோருக்கு முதல்ராகும்  அதிர்ஷ்டம் இல்லை என  தெரிவித்துள்ளார்.