செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (10:02 IST)

மதுரையில் ரஜினி போட்டியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்க உள்ள நிலையில், அவர் மதுரையில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீவிர அரசியலுக்கு வர உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்தார். இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அதன் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ரஜினியின் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்றும் மதுரையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது 
 
இந்தக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை டிஎஸ்பி குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த தீர்மானத்தின்படி ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்துவாரா? சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்