வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (12:16 IST)

மேயர் பதவி வேணும்: அசராத ராஜன் செல்லப்பா; ஆடிப்போன அதிமுக தலைகள்!

மதுரை மேயர் பதவியை தனது மகன் ராஜ் சத்யனுக்கு வழங்குமாறு ராஜன் செல்லப்பா கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பேட்டி அளித்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார் ராஜன் செல்லப்பா. இந்நிலையில் இன்று தனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனையிலும் ஈடுப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவெனில், தேர்தலில் தன்னுடைய மகன் ராஜ் சத்யன் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் முன்பு தோல்வியை தழுவியதால் அதை சரிகட்டும் விதத்தில் மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடத்தில் கேட்டுள்ளாராம். 
 
ஆம், ராஜன் செல்லப்பா ஏற்கனவே மதுரையில் மேயராக இருந்ததால், இப்போது அதே மேயர் பதவியை எதிர்ப்பார்க்கிறாராம். இது அதிமுக அதிகாரத்துவம் நிறைந்த தலைவர்களுக்கு நெருக்கடியாகவும் அதிர்ச்சி விஷயமாகவும் மாறியுள்ளதாம்.