புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (17:08 IST)

கட்சி செயல்பாடுகளை பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் – ஓபிஎஸ் & ஈபிஸ் கூட்டறிக்கை !

கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் என முதல்வரும் துணை முதல்வரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான  மதுரை ராஜன் செல்லப்பா இரு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் ‘அதிமுகவுக்கு ஒரேத் தலைமை தேவை. தொண்டர்களுக்கு யார் கையில் அதிகாரம் உள்ளது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா போல் கழகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். எனவே அதிமுகவுக்கு பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும் என பொதுக்குழுவில் கோரிக்கை வைப்போம்’ எனக் கூறினார்.

ராஜன் செல்லப்பா இந்த பேட்டியால் அதிமுக வின் உட்கட்சி அரசியல் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு உருவானது. இதனை அடுத்து கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்பதைக் காட்டுவதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்து கூட்டாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கழகம் இது. அதிமுக ராணுவக் கட்டுப்பாட்டோடு இயங்கும் இயக்கம்.கடந்த சில நாட்களாக கழக உடன்பிறப்புகள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கட்சி அடுத்தது என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் ஊடகங்கள் வழியே பேசுவது வரவேற்கத்தக்கதாக அல்ல. அதனால் கட்சி நிர்வாகிகள் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் ‘ எனக் கண்டிப்புடன் கூறியுள்ளனர்