புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் அதிகாலை முதல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

rain
சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் கோடை வெப்பத்தால் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னையிலுள்ள மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தற்போது இலேசாக மழை பெய்து வருகிறது 
 
அதேபோல் ஆர்.ஏ.புரம், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது 
 
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் நாகை மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அசினா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது