திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (16:08 IST)

3 நாட்களாக மணல் குவாரி அதிபர் அலுவலகத்தில் நடந்த சோதனை நிறைவு.. பெட்டி பெட்டியாக ஆவணங்கள்..!

கடந்த மூன்று நாட்களாக மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் என்பவரின் அலுவலகத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை சற்றுமுன் நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் என்பவர் முறைகேடாக  மணல் குவாரியில் சம்பாதித்து வருவதாக புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை செய்தனர். 
 
இந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை பெட்டி பெட்டியாக கட்டி வாகனத்தில் அதிகாரிகள் எடுத்துச் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே ராமச்சந்திரன் வீடு, அவருடைய உறவினர்கள் வீடு, அவருடைய நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva