மணல் ஒப்பந்ததாரரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
கரூரில் மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.*
கரூரில் இரண்டாவது நாளாக செயல்படாத மணல் குவாரிகள் ஆன்லைனில் பணம் கட்டியவர்களின் லாரியும் காத்துக்கிடந்த அவலம்.
தமிழக அளவில் அரசு மணல் ஒப்பந்ததாரர் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், மல்லம்பாளையம் என்ற இடத்தில் அள்ளப்பட்டு, கணபதிபாளையம், நன்னியூர் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள மணல் கிடங்கிற்கு எடுத்து செல்லபபட்டு விநியோகிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அமலக்கத்துறை அதிகாரி சோதனை எதிரோலியால் நேற்றும் மணல் குவாரி செயல்படாமல் இருந்த நிலையில்,இரண்டாவது நாளான இன்றும் இயக்கப்படவில்லை.
இரண்டு நாட்களாக மணல் எடுக்க வந்த லாரிகள் காத்திருந்த வருகின்றனர்.
மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிப்பு பலகையும், இதன் மூலம் நாளையும் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற உள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் வெளியூரில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்ல வந்துள்ள லாரி ஓட்டுனர்கள் லாரியுடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் முறைப்படி ஆன்லைனில் பணம் செலுத்தியவர்களின் லாரிகளும் காத்துக்கிடந்து வருகின்றது.