என் சகோதரனை இழந்து விட்டேன் - நடிகர் விஷால் கண்ணீர்

Vishal
Last Modified செவ்வாய், 8 மே 2018 (16:40 IST)
நடிகர் விஷாலின் உறவினர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

 
நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்ணீர் மல்க ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
பார்கவ் உன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இதை என்னால் ஏற்கமுடியவில்லை. என்னுடைய சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னை இழந்து வாடுகிறேன் என்பதை டிவிட்டர் மூலம் தெரிவிக்கிறேன். உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேன். இந்த பதிவை எழுதும்போதே நான் அழுகிறேன்” என உருக்கமாக அவர் பதிவிட்டுள்ளார்.
 
அவரின் கசின் பார்கவ் இன்று தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவர் இந்த செய்தியை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :