வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (13:04 IST)

பின்னுக்கு தள்ளப்பட்ட புதியதலைமுறை: பழிவாங்கும் நடவடிக்கையா?

பிரபல தமிழ் செய்தி சேனல் புதியதலைமுறை சமீபத்தில் வட்டமேஜை விவாதம் என்ற நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இந்த விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், இதனால் விவாதத்தில் பிரச்சனை உருவாகியதாகவும் தகவல்கள் வந்தது. இதனையடுத்து அமீர் மீதும் புதிய தலைமுறை மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
ஊடகம் மீதான வழக்குப்பதிவுக்கு வழக்கம்போல் அரசியல் கட்சி தலைவர்கள் இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கை என அறிக்கை விட்டனர். புதியதலைமுறை டுவிட்டர் பக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக இந்த செய்தி தான் பிரதான செய்தியாக இருந்தது. ஆனால் டுவிட்டர் பயனாளிகள் முதல்முறையாக தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த நிலையில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில் 124 வது இடத்தில் இருந்த புதியதலைமுறை 499 வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக புதிய தலைமுறையின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி சேனல் வரிசையிலிருந்த புதிய தலைமுறை பிறமொழி சேனல் வரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்களோ, டுவிட்டர் பயனாளிகளோ இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது.