1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2018 (23:37 IST)

1 வருடத்திற்கு இலவசம்: டிவி நேயர்களை குறிவைக்கும் ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்ததும் மற்ற தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. 4ஜி சேவையுடன் இலவச அழைப்புகள் என்ற ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பால் நொந்து நூலான மற்ற நிறுவனங்கள் ஆட்டம் கண்டது மட்டுமின்றி ஏர்செல் திவால் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் தொலைத்தொடர்பு துறையில் ஆழமாக காலடி எடுத்து வைத்துவிட்ட நிலையில் தற்போது ரிலையன்ஸ் பார்வை டிவி நேயர்கள் வசம் சென்றுள்ளது. ஏற்கனவே இனிமேல் கேபிள் கனெக்சன் கிடையாது, அனைவரும் கட்டாயம் செட் ஆப் பாக்ஸ் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இலவச செட் ஆப் பாக்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசம் என்ற அதிரடி ஆஃபருடன் களத்தில் இறங்கியுள்ளது.

இதனால் மாதம் மாதம் ஒரு பெரிய தொகையை வசூல் செய்து வரும் மற்ற செட் ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஒரு வருடத்துக்கு அனைத்து சேனல்கள், ஹெச்டி சேனல்கள் இலவசம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட செட்டாப் பாக்ஸ் இலவசம் என்ற அறிவிப்பு மட்டுமின்றி ஒரு வருடத்திற்கு பின்னரும் ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) என்ற வகையில் 500 சேனல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது..