1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜனவரி 2018 (15:20 IST)

ஜெயலலிதாவை கொல்ல 33 ஆண்டுகள் தேவையா?: புகழேந்தி ஆவேசம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் தற்போது வரை மர்மம் நீடிக்கிறது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவுடன் கடைசி வரை இருந்த அவரது தோழி சசிகலா தான் அவரை கொன்றதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக அதிமுகவில் அவருக்கு எதிராக உள்ளவர்கள் தான் சசிகலா மீது இந்த முத்திரையை குத்துகின்றனர்.
 
இந்நிலையில் இந்த வதந்தி குறித்து எம்ஜிஆர் பிறந்தாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார். சசிகலாவுக்கு கொலைகாரி என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர். ஒருவரை கொல்வதற்கு 33 ஆண்டுகள் தேவையா? சசிகலாவின் உருவத்தில் வேலுநாச்சியாரை பார்க்கிறேன் என புகழேந்தி புகழாரம் சூட்டினார்.