திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜனவரி 2018 (10:34 IST)

கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும்: ஜீயரின் ரெளடி பேச்சு!!

கவிஞர் வைரமுத்து வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான வார்த்தையை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் வைரமுத்துவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 
 
இதன் பின்னர், வைரமுத்துவுக்கு எதிராக, வாழ்க இந்து நீதி தர்மம் எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், இந்து அமைப்பினர் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜனவரி 15 ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.
 
அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். 
 
அதன் படி ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு பின்னர் அதை கலைத்துக்கொண்டார். மேலும், பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜீயர் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும். இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். 
 
எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசியுள்ளார். இது வைரமுத்து விவகாரத்தில் மேலும் சிக்கலை கிளப்பியுள்ளது.