அமமுகவை கண்டமாக்கும் ஐடி விங்: தினகரனை நெருக்கும் புகழேந்தி!

Last Updated: திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:43 IST)
அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, கட்சி தாவுவது குறித்து பேசுவது போல வெளியான வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளார். 
 
அதிமுகவிற்கு போட்டியாக பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தனது செல்வாக்கை கோட்டைவிட்டார். தேர்தல் சரிவிற்கு பின்னர் தங்கத் தமிழ்ச்செல்வன். இசக்கி சுப்பையா ஆகியோர் கட்சி தாவினர். 
 
இந்நிலையில் புகழேந்தியும் விரைவில் கட்சி தாவவிருப்பதாக கூறப்படுகிறது. ஆம், புகழேந்தி கட்சி தாவுவது குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
இந்த வீடியோ குறித்து புகழேந்தியிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார் என பிரபல நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புகழேந்தி கூறியதாவது, டிடிவி தினகரனின்  நடவடிக்கை பிடிக்காமல் அமமுக துவங்கிய போது இருந்த சிலர் கட்சியை விட்டு விலகியுள்ளனர். சிலர் கட்சிக்குள் இருந்துக்கொண்டே கட்சிக்காக செயல்படாமல் உள்ளனர். 
 
சமீபத்தில் தினகரன் கோவை முக்கிய நிர்வாகிகள் சிலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் அவர்கள் கடும் மன உலைச்சலில் இருந்தனர். இதனால் அவர்களை சந்தித்து பேசினேன். அவர்களுக்கு ஆறுதலாய் சில வார்த்தைகளை கூறினேன். 
நான்கு சுவற்றிற்குள் நடந்த விஷயத்தை எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அமமுக ஐடி விங் சமூக வளைதளத்தில் வெளியிட்டது எந்த விதத்தில் நியாயம். என்னை அசிங்கப்படுத்தவே அமமுக ஐடி விங் செயல்படுவதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
நான் சசிகலாவிற்காகவே டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஐடி விங்கின் இந்த நாகரீகமற்ற செயலுக்கு கட்சி தலைமை பதில் சொல்ல வேண்டும். 
 
நான் சசிகலாவிற்கு வேண்டியவன் என்பதால் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறேனா அல்லது பழிவாங்கப்படுகின்றேனா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது என அவர கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :