திமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏவின் சகோதரர்: தினகரன் அதிர்ச்சி

Last Modified செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:02 IST)
தினகரனின் அமமுகவில் இருந்து ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்ந்து திமுகவின் பக்கம் சாய்ந்து வருவது தெரிந்ததே. குறிப்பாக செந்தில் பாலாஜி மற்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு பெரிய விக்கெட்டுக்கள் அமமுகவை நிலைகுலைய செய்துவிட்டது

இந்த நிலையில் அமமுகவின் இன்னொரு விக்கெட் சற்றுமுன் விழுந்துள்ளது. அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலருமான பரணி கார்த்திகேயன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன் நடைபெற்ற ஒரு எளிய இணைப்பு விழாவில் அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக உறுப்பினருக்கான அட்டையை முக ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே ஒவ்வொருவராக அமமுகவில் இருந்து வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் தினகரன் நேற்று தான் புதிய மாவட்ட நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் இந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் கட்சியில் இருந்து வெளியேறியிருப்பது தினகரனைம் அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :