புதுக்கோட்டையில் தீண்டாமை; சண்டையை மறந்து சமத்துவ பொங்கல்!
புதுக்கோட்டையில் தீண்டாமை கொடுமைகள் நடத்தப்பட்ட கிராமத்தில் சமத்துவ பொங்கல் வைத்து மக்கள் வழிபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின் மக்களும் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை அங்குள்ள கோவிலுக்கு செல்ல மற்ற சமூகத்தினர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தனிக்குவளை முறையில் அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
மேலும் சமீபத்தில் அங்கு பட்டியலின மக்கள் புழங்கும் டேங்கில் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின் மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றதோடு, தீண்டாமையை கடைபிடித்த சிலரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதை தொடர்ந்து கிராம மக்களை அழைத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தீண்டாமையை கடைபிடிக்கக்கூடாது என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த மக்கள் நல்லிணக்கமானதை வெளிப்படுத்தும் விதமாக இறையூர் அய்யனார் கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சமத்துவ பொங்கள் நடத்தி ஒண்றிணைந்து கடவுள் வழிபாடு செய்தனர்.
Edit By Prasanth.K