திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (18:15 IST)

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கில் கைதான ராஜா தப்பியோட்டம்: அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கில் கைதான ராஜா தப்பியோட்டம்: 
புதுக்கோட்டை அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அவர் சற்றுமுன் தப்பியோடிவிட்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயதுச் சிறுமி ஒருவரை ராஜா என்ற 27 வயது வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொலை செய்தார். பின்னர், சடலத்தைக் கண்மாய் கரையோரம் உள்ள கருவேலங் காட்டுக்குள் வீசிச் சென்றார். இந்தத் துயரமான சம்பவம் தமிழகம் முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து காவல்துறையினர் ராஜா என்பவரை கைது செய்த நிலையில் இன்று அவரை மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்க அழைத்து சென்றனர்.
 
இந்த நிலையில் திடீரென காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா தப்பி ஓடிவிட்டதாகவும், இதனையடுத்து எஸ்.பி. பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில், ராஜாவைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கைதி தப்பியோடியதால் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது