திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (08:45 IST)

வங்கி மேலாளர் ஓட ஓட விரட்டப்பட்டு கொலை: திருச்சியில் பயங்கரம்

திருச்சியில் பட்டப்பகலில் வங்கி மேலாளர் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருச்சியில் ரயில்வே போலீசாக பணி புரியும் 55 வயது ரங்கராஜ் என்பவருக்கும் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வங்கி மேலாளர் புகழேந்தி என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது இதனை அடுத்து ரயில்வே போலீஸ் ரங்கராஜ், புகழேந்தியின் அண்ணன் கோவேந்தன் என்பவரால் சில நாட்களுக்கு முன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் 
 
இந்த வழக்கில் கோவேந்தன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில் கோவேந்தன் மற்றும் அவரது சகோதரர் புகழேந்தி ஆகியோர்களை கொலை செய்ய ரங்கராஜன் உறவினர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது 
 
இதனையடுத்து வங்கி மேலாளர் புகழேந்தி வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் இடையில் வழிமறித்த ஒரு கும்பல் கோவேந்தன் மற்றும் புகழேந்தியை ஓட ஓட விரட்டியது இதில் வங்கி மேலாளர் புகழேந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். வங்கி மேலாளர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது