செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:15 IST)

சொத்து தகராறு… காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் தாசம்பாளையத்தில் வசித்து வந்தவர் கலியபெருமாள். இவர் ஒருவருடத்திற்கு முன் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டைப் போட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மது அருந்திவிட்டு வந்த அவர் தனது மனைவி பெயரில் உள்ள வீட்டுமனையை விற்பனை செய்யக் கையெழுத்துப் போட்டுத்தருமாறு கேட்டுள்ளார்.

அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், ஆவேசம் அடைந்த கலியப்பெருமாள் உலக்கையை எடுத்து மனைவியை தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் பயந்துபோன கலியபெருமாள் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் விசரணை நடத்தி வருகின்றனர்