1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (20:12 IST)

நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி...காவலர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே  நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவல்ர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ரவுடியைப் பிடிக்கச் சென்ற போது நாடு வெடிகுண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் உயிரிழந்தார்.

வெடிகுண்டு வீசிய நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். த

மேலும் மணக்கரையில் நட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது, தப்பி ஓட முயன்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் துரைமுத்து பலியானார்.
.

காவலை கொன்றுவிட்டுத் தப்பி ஓட முயன்ற துரைமுத்துவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டதால் பலியானதாக தகவல் வெளியாகிறது.