வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (15:49 IST)

17 % ஊதிய உயர்வு: வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 % ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது.

இந்தியாவில்  உள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், பொதுத்துறை  வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 % ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது.

ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர்  1 ஆம் தேடி முதல் முன் தேதியிட்டு அமலாகும் இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.  இதனால் வங்கிகளுக்கு ரூ.7898 கோடி கூடுதலாக செல்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.