புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (08:54 IST)

அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்" என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் பாட வேளை, தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விளையாட்டு, திறன் மேம்பாடு, கற்றலை மேம்படுத்தும் பணிகளில் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதற்கான அனுமதியை அந்தந்த பள்ளி முதல்வர்களே தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்றும், பாடவேளை, தேர்வுக்காலம், பாதிக்காத வகையில் தன்னார்வலர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை பள்ளி முதல்வர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
மேலும் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு காலியிடங்களை நிரப்ப அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படகூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.