1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (18:48 IST)

வகுப்பறையில் மசாஜ், சீட்டுக்கட்டு, கந்துவட்டி: அரசு பள்ளி ஆசிரியர் அட்டூழியம்

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் சீட்டுக்கட்டு, கந்துவட்டி தொழில் ஆகியவற்றை செய்து வந்ததால் பெற்றோர்கள் குறிப்பிட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். 
 
இடையகோட்டை அரசு பள்ளி ஆசிரியர் கணேஷ் வகுப்பறையில் பாடம் எடுப்பதைவிட்டு மாணவர்களை வைத்து மசாஜ் செய்வது, பள்ளியில் கிடைத்த இடத்தில் தூங்குவது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு வட்டிக்கு பணம்விட்டு பள்ளி வளாகத்தில் கந்து வட்டி தொழில் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். 
 
இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்த போது அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் மட்டுமே செய்துள்ளனர். ஆசியர்களை நம்பி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஆசியர்களின் இது போன்ற செயல்களால் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.