1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (16:13 IST)

நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகள் திணறி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் வரும் 30 ஆம் தேதிவரை 5 வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசுப் பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது.

இதனையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ், நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார்  பேருந்துகள் இயங்கும் எப குறிப்பிட்ட மண்டலத்துக்குள் அரசு விதித்துளை விதிகளை பின்பற்றி 4400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.