Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செயல்படாத கட்சிக்கு செயல் தலைவராம்: ஸ்டாலினை விளாசும் பிரேமலதா!

செயல்படாத கட்சிக்கு செயல் தலைவராம்: ஸ்டாலினை விளாசும் பிரேமலதா!


Caston| Last Modified ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (17:01 IST)
தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் மகளிர் அணி செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா செயல் தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. நீட் தேர்வுக்காக போராடி தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு ஒரு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவை தொடங்கினார்கள்.
 
இந்த பொதுக்குழுவில் பேசிய பிரேமலதா, நமது கேப்டன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஜெயலலிதாவின் மூஞ்சை உடைப்பதுபோல் நேருக்கு நேர் கேள்விகளைக் கேட்டார். ஆனால் தற்போது உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார் என்றார்.
 
மேலும் செயல்படாத கட்சிக்குச் செயல் தலைவராம். ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி கேட்பதில்லை; வாய் திறப்பதில்லை என கூறினார் பிரேமலதா.


இதில் மேலும் படிக்கவும் :