வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:42 IST)

புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு: கருவின் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழப்பு!

அருப்புக்கோட்டை அருகே புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவரது வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் உயிரிழந்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி என்ற பகுதியில் ஐந்து மாத கர்ப்பிணி அனந்தாயி என்பவர் சமீபத்தில் கர்ப்பமுற்றார். அவருடைய வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக தெரிய வருகிறது 
 
இந்த நிலையில் நேற்று கர்ப்பிணிப்பெண் அனந்தாயி புரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது புரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும், அவரது வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.