1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (15:09 IST)

காவல்நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு: பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்!

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது!
 
வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்! தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். 
 
சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்!