புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (09:31 IST)

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9ஆம் வகுப்பு மாணவி: போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு!

ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தாலியுடன் பள்ளிக்கு வந்ததை அடுத்து அவருக்கு தாலி கட்டிய இளைஞர் மற்றும் இளைஞரின் பெற்றோர், மாணவியின் பெற்றோர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
மதுரை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளி மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர் 
 
மேலும் மாணவியின் பெற்றோர் மற்றும் தாலி கட்டிய இளைஞரான அருண் பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக நல துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்