செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:16 IST)

கிச்சடியில் போதை மருந்து; 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை! – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

உத்தரபிரதேசத்தில் கிச்சடியில் போதை மருந்து கலந்து மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளை சேர்ந்த மேலாளர்கள் இருவர் கடந்த 18ம் தேதி இரவு 17 மாணவிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு செய்முறை தேர்வு இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மாணவிகளுக்கு போதை மருந்து கலந்த கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் அவர்களை மேலாளர்கள் இருவரும் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதுபற்றி வெளியே சொன்னால் குடும்பத்தை கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் இதுபற்றி பேசாத மாணவிகள் பள்ளி செல்லவும் தயங்கியுள்ளனர்.

17 நாட்கள் கழித்து இந்த விவகாரம் அந்த பகுதி பாஜக எம்.எல்.ஏவுக்கு தெரிய வர அவர் உத்தரவின்பேரில் இந்த வன்கொடுமை விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து மேலாளர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்துள்ள போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.