1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (09:50 IST)

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்! – ரயில்வே அறிவிப்பு!

indian railway
பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பேருந்துகள், ரயில்களில் சில மாதங்கள் முன்பே முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்க தொடங்கவுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்தப்படி உள்ளது.


நேற்று தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து (ரயில் எண் 06085) ரயில் காலை 7.30க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும், மறுமார்க்கமாக ஜனவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் இரவு 08.45க்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் (எண் 06086) மறுநாள் காலை 05.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜொலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K