ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (17:58 IST)

தாம்பரம் - விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில்.. நாளை முதல் புதிய மாற்றம்..!

Chennai electric train
தாம்பரம் = விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில் நாளை முதல் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் சிறப்பு புறநகர் ரயில் இதுவரை கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்றது. 
 
இந்த ரயில் கூடுதலான ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பயணிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்த தென்னக ரயில்வே தற்போது  மேலும் ஏழு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது. 
 
இதன்படி தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு புறநகர் ரயில்கள் நாளை முதல் பரனூர், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran