1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2018 (11:45 IST)

பாஜகவில் ஒரு பச்சை திராவிடன்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி!

பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது நான் திராவிடத்துக்கு எதிரானவன் இல்லை. நானும் பச்சை திராவிடன் தான் என அதிரடியாக கூறியுள்ளார்.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக காலூன்ற தீவிரமாக முயன்று வருகிறது. பல்வேறு பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒன்று திராவிட கட்சிகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேசிய பொன்னார் அதிமுக தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. திமுகவுக்கும் அதே நிலைமைதான் என விமர்சித்தார்.
 
இந்நிலையில் நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னார், நான் திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை. நானும் பச்சை திராவிடன்தான் என்று கூறினார். கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற மக்களின் விருப்பத்தையே தான் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப.வீரபாண்டியன், நானும் பச்சைத் திராவிடன்தான் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதே திராவிடத்துக்குக் கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.