1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:22 IST)

அரசு வாகனங்களுக்குதான் “G” ஸ்டிக்கர்.. ஒப்பந்த வாகனங்களில் ஒட்டினால் பறிமுதல்! – காவல்துறை எச்சரிக்கை!

அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த முறையில் இயக்கப்படும் வாகனங்களில் “ஜி” ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசு வாகனங்களில் “ஜி” என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்படுவது வழக்கம். அரசு வாகனங்கள் மட்டுமல்லாமல் சில தனியார் வாகனங்களும் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான ஒப்பந்த வாகனங்களும் “ஜி” ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாகவும், அதன்மூலம் முறைகேடான செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து எச்சரித்துள்ள காவல்துறை அரசு வாகனங்களை தவிர்த்து ஒப்பந்த வாகனங்களில் “ஜி” ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது.