புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (16:36 IST)

போலிஸாரை மிரட்டி, கடித்து விட்டு தப்பித்து ஓடிய கள்ளச்சாராய வியாபாரி...

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள புதுவிடுதியில் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றாவாளிகள் திருவோணத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட போலிஸார் அவர்களை கைது செய்ய விரைந்து சென்றனர்.
அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும், போலீஸாருக்கும்  வாக்குவாதம் முற்றியது. பின்னர், குற்றவாளிகள் இருவரும் போலிஸாரை கடித்து விட்டு  அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. இதில், தலைமைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆல்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
 
தற்போது தலைமறைவாக இருக்கும் இளங்கோவன் மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.  
 
கள்ளச்சாராய வியாபாரிகள் போலிஸாரை கடித்து விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.