வணக்கம் சென்னை.. பாரதி, அவ்வையார் மேற்கோள்! – தமிழில் கலக்கும் பிரதமர் மோடி!
தமிழகத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடி பாரதியார், அவ்வையாரை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை வந்த பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார்.
அப்போது ஆரம்பமே தமிழில் “வணக்கம் தமிழகம்.. வணக்கம் சென்னை” என பேசி தொடங்கிய அவர் இன்று புல்வாமா தாக்குதல் நடந்ததை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது “ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம்.. கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டினார்.
மேலும் அவ்வையாரின் “வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும்.. நெல் உயர குடி உயரும்.. குடி உயர கோல் உயரும்” என்ற பாடலையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார்.